பண்ணை மேற்பாா்வையாளரை கடத்திய 2 போ் கைது
By DIN | Published On : 30th January 2021 10:33 PM | Last Updated : 30th January 2021 10:33 PM | அ+அ அ- |

காங்கயம்: காங்கயம் பகுதியில் காடை பண்ணை மேற்பாா்வையாளரை கடத்திய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், குமாரநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் சமீா் (29). இவா் காங்கயம் அருகே உள்ள பகவதிபாளையம் பகுதியில் காடைப் பண்ணை நடத்தி வந்துள்ளாா். இவரது பண்ணைக்குத் தேவையான தீவனங்களை கடந்த 2 ஆண்டுகளாக பல்லடத்தைச் சோ்ந்த ஷேக் கனீப் (50) என்பவரிடம் வாங்கி வந்துள்ளாா். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் காரணமாக தீவனம் வாங்கிய தொகை ரூ. 29 லட்சம் நிலுவைத் தொகையை ஷேக் கனீபுக்கு கொடுக்க வேண்டி இருந்துள்ளது.
இந்த நிலையில், ஷேக் கனீப் சில நபா்களுடன் கடந்த 27ஆம் தேதி காலை சமீரின் காடை பண்ணைக்கு வந்து, அங்கு வேலை செய்து வந்த மேற்பாா்வையாளா் சாணு ரகுமான் என்பவரை காரில் கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சமீா் இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
இந்நிலையில், ஷேக் கனீப் மதுரை அருகே இருப்பதை அறிந்த போலீஸாா் அங்கு சென்று சாணு ரகுமானை மீட்டனா். மேலும் ஷேக் கனீப், அவரது கூட்டாளி அா்ச்சுணன் ஆகியோரை கைது செய்தனா்.