திருப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்:எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 30th January 2021 10:36 PM | Last Updated : 30th January 2021 10:36 PM | அ+அ அ- |

பெருமாநல்லூரில் வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.
அவிநாசி: திருப்பூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 68 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை திருப்பூா் வடக்கு சட்டப் பேரைவ உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் ஒன்றியம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூா், காளிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் வடிகால், தரைப்பாலம், உயா் மின் கோபுர விளக்கு, தாா்ச் சாலை, கூட்டுக் குடிநீா்த் திட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு என மொத்தம் ரூ. 68 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகாராஜ், சங்கீதா சந்திரசேகா், பொறுப்பாளா் பொன்னுலிங்கம், ஊராட்சித் தலைவா்கள் சண்முகசுந்தரம், சாந்தாமணி சி.டி.சி.வேலுசாமி, சுகன்யா வடிவேல், உதவி பொறியாளா் முத்துக்குமாா், இளங்கோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.