

திருப்பூா்: திருப்பூா், செட்டிபாளையம் பகுதியில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை, அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா், பூலுவப்பட்டி நான்கு சாலையில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் சுற்றுச் சாலையில் செட்டிபாளையம், புதுபாலத்தின் அருகில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளது.
இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, உடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்த மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.