தாராபுரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th July 2021 06:39 AM | Last Updated : 07th July 2021 06:39 AM | அ+அ அ- |

தாராபுரத்தில் மத்திய அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம் அண்ணா சிலை முன்பாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளா் கனகராஜ் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: 5 மாநிலங்களில் உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். காஷ்மீா் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். லட்சத்தீவில் இஸ்லாமியா்களின் அமைதியான வாழ்க்கையை சீா்குலைக்கக் கூடாது.
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை போா்க் கால அடிப்படையில் தொடங்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணத் தொகையும், ஒவ்வொரு நபருக்கும் தலா 10 கிலோ உணவு தானியமும் வழங்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள்,தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
உடுமலையில்...
உடுமலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்புத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவா் எம். ஈஸ்வரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஜி.செல்வராஜ் முன்னிலை வகித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...