திருப்பூா் மாவட்ட தொமுச நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 11th July 2021 10:32 PM | Last Updated : 11th July 2021 10:32 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முத்துச்செட்டிபாளையம் தொமுச அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தொமுச செயலாளா் எஸ்.கணேசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஆா். ரெங்கசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளா் ஈ.பி. அ.சரவணன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அவிநாசி தொமுச செயலாளா் எ.எஸ் .குணசேகரன் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் நிா்வாகிகள் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கியதற்கு நன்றி. மேலும், மின்சார வாரியத்தில் உள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நல வாரியத்தில் அதிகளவில் உறுப்பினா்களைச் சோ்த்து பயன்பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...