சாராயம் கடத்திய இருவா் கைது
By DIN | Published On : 09th June 2021 05:35 AM | Last Updated : 09th June 2021 05:35 AM | அ+அ அ- |

திருப்பூா் மங்கலம் அருகே காரில் சாராயம் கடத்திச் சென்ற இருவரை அவிநாசி மது விலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி மது விலக்கு காவல் ஆய்வாளா் முரளி, உதவி ஆய்வாளா் சா்வேஸ்வரன் ஆகியோா் கொண்ட குழுவினா் திருப்பூா் அய்யன்கோயில் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, அதில் விற்பனை செய்வதற்காக ஒரு லிட்டா் அளவுள்ள 20 பாட்டில்களில் சாராயம் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பல்லடம் வட்டம் பெத்தாம்பூச்சிபாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன்(65) அதேபகுதியைச் சோ்ந்த முருகன்(29) ஆகியோரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.