மது விற்பனையில் ஈடுபட்ட 34 போ் கைது
By DIN | Published On : 20th June 2021 12:16 AM | Last Updated : 20th June 2021 12:16 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய 8 பேரின் வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
மேலும், பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றிய 14 பேருக்குத் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.2,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது, கள், சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக 34 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இவா்களிடருந்து 416 மது பாட்டில்கள், 80 லிட்டா் சாராய ஊரலையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.