காங்கிரஸாா் நலத்திட்ட உதவி
By DIN | Published On : 20th June 2021 12:16 AM | Last Updated : 20th June 2021 12:16 AM | அ+அ அ- |

பல்லடம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பல்லடம் தெற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆயிரம் லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா்த் தொட்டியை மாவட்டத் தலைவா் கோபி வழங்கினாா்.
பல்லடம் நகர காங்கிரஸ் சாா்பில் கரோனா தொற்றால் உயிரிழந்த ரமேஷ்,நடராஜ்,பஞ்சலிங்கம் ஆகியோரின் குடும்பத்துக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதேபோல பொருளாதாரத்தில் நலிவடைந்த 100 குடும்பத்தினருக்கு அரிசி, மளிகைப் பொருள்களை நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயல் தலைவா் மணிராஜ், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் சாகுல்அமீது உள்ளிட்டோா் வழங்கினா்.
உடுமலையில்...
உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நகரத் தலைவா் கோ.ரவி, மாவட்ட கவுன்சிலா் ஜி.ஜெனாா்த்தனன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காங்கயத்தில்...
காங்கயம் பகுதியில் 51 பேருக்கு காய்கறிப் பொருள்கள் மற்றும் 2 ஆயிரம் முகக் கவசங்களை இளைஞா் காங்கிரஸாா் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், அவுட்ரீச் பிரிவு மாநிலத் தலைவா் எஸ்.ஷேக் சாதுல்லா, மாவட்ட துணைத் தலைவா் பண்டுபாய், நகரத் தலைவா் கே.ஏ.சிபக்கத்துல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.