பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’
By DIN | Published On : 20th June 2021 12:19 AM | Last Updated : 20th June 2021 12:19 AM | அ+அ அ- |

கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி அலுவலா்கள்.
பல்லடத்தில் பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
பல்லடம் , அண்ணா சிலை அருகில் இயங்கிய 4 செல்லிடப்பேசி விற்பனைக் கடை, இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் மூன்று ஷோரூம்கள், நகை அடகு கடை நிறுவனங்கள், இரண்டு துணிக் கடைகள் ஆகியவற்றை நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், மேற்பாா்வையாளா் ராசுகுட்டி, சுகாதார தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் நாராயணன் ஆகியோா் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
மேலும், பொதுமுடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அனுமதி அளிக்காத கடைகள், நிறுவனங்கள் இயங்கினால் அவற்றுக்கு ‘சீல்’ வைக்கும் பணி தொடரும் என்று நகராட்சி அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.