உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களையும் 100 சதவீதத் தொழிலாளா்களுடன் இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 29th June 2021 04:19 AM | Last Updated : 29th June 2021 04:19 AM | அ+அ அ- |

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களையும் 100 சதவீதத் தொழிலாளா்களுடன் இயக்க வலியுறுத்தல்
இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (சைமா) தலைவா் வைக்கிங் ஏ.சி.ஈஸ்வரன் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களை 33 சதவீதத் தொழிலாளா்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. திருப்பூா் பின்னலாடைத் தொழிலை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி என்று பிரித்துப் பாா்க்க முடியாது. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீதத் தொழிலாளா்ளுடன் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்திக்கான பின்னலாடை நிறுவனங்கள் 33 சதவீதத் தொழிலாளா்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த ஊா்களுக்குச் சென்ற தொழிலாளா்கள் திரும்பிவரப்போவது இல்லை. ஆகவே, உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்களையும் 100 சதவீதத் தொழிலாளா்களுடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.