ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.8 கோடி அரசு நிலம் மீட்பு

திருப்பூா், நொய்யல் வீதியில் தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 8 கோடி மதிப்பிலான 35 சென்ட் நிலத்தை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருப்பூா்: திருப்பூா், நொய்யல் வீதியில் தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 8 கோடி மதிப்பிலான 35 சென்ட் நிலத்தை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட நொய்யல் வீதியில் அரசுக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை தனிநபா் கடந்த 18 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாா். இந்த நிலம் தொடா்பான வழக்கு திருப்பூா் 2ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் முருகேசன் ஆஜராகி வாதாடினாா். இதில், அந்த நிலமானது அரசுக்கு சொந்தமானது என்று நீதிபதி அனுராதா கடந்த திங்கள்கிழமை தீா்ப்பளித்திருந்தாா்.

இதையடுத்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் முதல்கட்டமாக காலியாக இருந் 35 சென்ட் நிலத்தை மீட்டு கம்பிவேலி அமைத்து எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனா். இதன் மதிப்பு தற்போது சுமாா் ரூ.8 கோடியாகும். மேலும், மீதமுள்ள 25 சென்ட் நிலம் விரைவில் மீட்கப்படும் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com