ராமா் கோயில் கட்டும் பணிக்கு குண்டடம் ஒன்றியத்தில் ரூ. 7.42 லட்சம் வசூல்
By DIN | Published On : 04th March 2021 01:27 AM | Last Updated : 04th March 2021 01:27 AM | அ+அ அ- |

திருப்பூா்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் திருப்பணிக்காக திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தில் பொதுமக்களிடமிருந்து ரூ. 7.42 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமா் பிறந்த இடத்தில் கோயில் கட்டும் திருப்பணிக்காக ஹிந்து அமைப்பினா் பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்படி திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆா்எஸ்எஸ், சேவா பாரதி, பாஜக, இந்து முன்னணி மற்றும் ராம பக்தா்கள் சாா்பில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரையில் நிதி வசூலிக்கும் பணி நடைபெற்றது. இதில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களிடமிருந்து மொத்தம் ரூ. 7.42 நிதி வசூலிக்கப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.