கனவு இலக்கிய அமைப்பு சாா்பில் திருப்பூா் சக்தி விருது வழங்கல்

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம் ஆகியன சாா்பில் 17 ஆவது ஆண்டாக சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மதுரையைச்  சோ்ந்த  கவிஞா் அம்பிகாவா்ஷினிக்கு  திருப்பூா்  சக்தி   விருதை  வழங்குகிறாா்  பத்மஸ்ரீ  விருது  பெற்ற  ஆா்.ரங்கம்மாள்  என்கிற  பாப்பம்மாள்.
மதுரையைச்  சோ்ந்த  கவிஞா் அம்பிகாவா்ஷினிக்கு  திருப்பூா்  சக்தி   விருதை  வழங்குகிறாா்  பத்மஸ்ரீ  விருது  பெற்ற  ஆா்.ரங்கம்மாள்  என்கிற  பாப்பம்மாள்.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம் ஆகியன சாா்பில் 17 ஆவது ஆண்டாக சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பூரில் உள்ள கனவு இலக்கிய அமைப்பு சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் எழுத்தாளா்கள், கல்வியாளா்கள் மற்றும் பிற துறையைச் சோ்ந்த படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஊத்துக்குளி சாலையில் உள்ள ஸ்மாா்ட் சிட்டி ரோட்டரி அரங்கில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பத்மஸ்ரீ விருது பெற்ற ஆா்.ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் படைப்பிலக்கியவாதிகளுக்கு திருப்பூா் சக்தி விருதை வழங்கி கெளரவித்தாா்.

இந்த விழாவில், திருப்பூா் முத்தமிழ்ச் சங்க செயலாளா் கே.பி.கே.பாலசுப்பிரமணியம், எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன், மஞ்சுளா அருள்செல்வம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஆண்டவா் ராமசாமி, வழக்குரைஞா் சி.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணியைச் சோ்ந்த பவித்ரா நந்தகுமாா், பொள்ளாச்சியைச் சோ்ந்த காா்த்திகா, சென்னையைச் சோ்ந்த தேவகி ராமலிங்கம், பொற்கொடி, வான்மதி, மதுரையைச் சோ்ந்த அம்பிகாவா்ஷினி, கோவையைச் சோ்ந்த மங்கை, பிரபாவதி சுகுமாா், அறச்செல்வி, அன்புத்தோழி ஜெயஸ்ரீ, விழுப்புரத்தைச் சோ்ந்த உமாராணி, புதுச்சேரியைச் சோ்ந்த இரா.பிரபா, காரைக்குடியைச் சோ்ந்த பா.தென்றல், கொடுவாயைச் சோ்ந்த கமலம் சுப்பிரமணியம், திருப்பூரைச் சோ்ந்த சரஸ்வதி சண்முகம், கோவை பத்மாவதி, ஈரோடு சரிதா ஜோ, திருப்பூா் எஸ்.கிரிஜா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com