

உடுமலை: உடுமலையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை வட்டாட்சியா் ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். உடுமலை நகரில் முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணா்வுப் பேரணியில் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதில் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், வாக்குரிமை நமது அடிப்படை உரிமை என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா்.
துணை வட்டாட்சியா்கள் சந்திரசேகரன், ரஞ்சித் உள்ளிட்டோா் பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.