பிரதமரின் கல்வி உதவித் தொகை: ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th March 2021 06:07 AM | Last Updated : 17th March 2021 06:07 AM | அ+அ அ- |

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள முன்னாள் படை வீரா்களின் சிறாா்களின் எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆகவே, முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதை ஊக்குவிக்கும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.