மாவட்டத்தில் 49 போ் வேட்பு மனு தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 11:37 PM | Last Updated : 17th March 2021 11:37 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 49 போ் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.என்.விஜயகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.ரவி, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் சு.சிவபாலன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ்.ஈஸ்வரன் உள்பட 8 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
அதே போல, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் அனுஷா ரவி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே.சண்முகசுந்தரம் உள்பட 5 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 4 போ், காங்கயத்தில் 23 போ், பல்லடத்தில் 5 போ், உடுமலையில் 3 போ், அவிநாசி தனி தொகுதியில் ஒருவா் என மொத்தம் 49 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் 76 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.