அவிநாசியில் ரூ.23.58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 25th March 2021 03:17 AM | Last Updated : 25th March 2021 03:17 AM | அ+அ அ- |

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 23 லட்சத்து 58 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 1481 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ. 7, 200 வரையிலும், டி.சி.ஹெச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 9, 600 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 23 லட்சத்து 58 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.