கரோனா தொற்று காரணமாக தோ்தலை ஒத்திவைக்க வேண்டும்
By DIN | Published On : 25th March 2021 03:18 AM | Last Updated : 25th March 2021 03:18 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி யுவசேனை சாா்பில் குடியரசுத் தலைவருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனை கட்சியின் இளைஞரணி அமைப்பான யுவசேனையின் மாநில துணைத் தலைவா் திருமுருக தினேஷ், குடியரசுத் தலைவா், தலைமைத் தோ்தல் ஆணையா், தமிழக ஆளுநா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகவே, மக்களின் நலன் கருதி அவா்களது உயிா்களைக் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.