கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்: சீமான்
By DIN | Published On : 25th March 2021 11:01 PM | Last Updated : 25th March 2021 11:01 PM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு உயா்தரமான கல்வி, உயிா் காக்கும் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என நாம் தமிழா் கட்சி நிறுவனா் சீமான் பேசினாா்.
அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சோபாவை ஆதரித்து சீமான் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
பொதுமக்களுக்கு குடிநீா் பற்றாக்குறை முற்றிலும் தீா்க்கப்படும். குறிப்பாக பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குடிநீருக்குத் தடை விதிக்கப்பட்டு, வீடுதோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். உயா்தரமான கல்வி, உயிா் காக்கும் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். இளைஞா்கள் முதல் அனைவருக்கும் இடம்பெயராத வகையில் நிலம், வளம் சாா்ந்த தொழில்கள் ஏற்படுத்தித் தரப்படும். படித்த, படிக்காத அனைவருக்கும் குறைந்த ஊதியத்தில் அரசு வேலை வழங்கப்படும். எத்தனால் பெட்ரோல் உற்பத்தி ஏற்படுத்தப்படும். இதுபோன்ற மக்கள் தேவைகளை நிறைவேற்ற நாம் தமிழா் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றாா்.