ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழப்பு: ராகுல் காந்தி

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழப்பு: ராகுல் காந்தி

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகம்தான் இந்தியா என்கிறோம், அதேபோல இந்தியாதான் தமிழகம் எனக் கூறலாம். மொழிகள், மதங்கள், கலாசாரங்கள், பண்பாடுகளின் ஒருங்கிணைப்புதான் இந்தியா. 
ஒன்றுபட்ட இந்தியா மீதான தாக்குதலாகவே தமிழ் மொழி, கலாசாரம் மீதான தாக்குதலை கருதுகிறேன். இந்தியாவை ஒன்றை சிந்தனைக்கு ஏற்றதாக மாற்றக்கூடிய முயற்சியை ஏற்க முடியாது. தமிழ் மொழி, கலாசாரம் பண்பாடுக்காக மட்டுமே நான் பேசவில்லை. எல்லா மொழிகளுக்குமாக நிற்கிறேன். முகக்கவச்சத்தால் எப்படி முகபாவம், எண்ணம் தெரியாதோ அதுபோலத்தான் அதிமுகவும். அதிமுக போன்ற தோற்றத்துடன் உள்ள கட்சி இப்போது முகக்கவசத்தை நீக்கினால் ஆர்எஸ்எஸ் ஆக இருக்கும். 
பழைய அதிமுக முடிந்துவிட்டது. இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ், பாஜகவால் இயக்கப்படும் அதிமுக. அமித் ஷா, மோகன் பகவத் காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார், ஆனால் அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத்துறை மத்திய அரசின்வசம் இருப்பதால் தவறு செய்த அதிமுக முதல்வர் தலைகுனிய நேரிடுகிறது. தமிழகத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் பல லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். 
தமிழகத்தை பாதிக்கச் செய்யும் வகையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வை எதிர்த்து முதல்வர் எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com