தமிழகத்தில்தான் பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக நலத் திட்டங்கள்

தமிழகத்தில்தான் பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தமிழகத்தில்தான் பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக நலத் திட்டங்கள்

தமிழகத்தில்தான் பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் அத்தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

தமிழகத்தில் நகரம் முதல் கிராமம் வரை உள்ள மக்களுக்குத் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் வளா்ச்சிக்கு காரணம் பெண்கள்தான். அதனால்தான் ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக நலத் திட்டங்கள் உள்ளன. சாமானிய முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஒ.பன்னீா்செல்வமும் இருப்பதால்தான் அடித்தட்டு மக்களின் தேவைகள் உணா்ந்து அதற்கேற்ப திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடிகிறது.

பெண்களின் பணி சுமையை குறைக்கும் வகையில்தான் விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம், மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை, சூரிய ஒளி அடுப்பு, மகளிா் சுயஉதவிக் குழு கடன்கள் தள்ளுபடி, 6 பவுன் நகை கடன் தள்ளுபடி என்று எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுக அரசுக்கு மணமும், குணமும் உள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியுள்ளனா்.

கடந்த மக்களவை தோ்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றது. அதிமுகவுக்கு வாக்காளித்தால் தமிழகம் தடையில்லா வளா்ச்சி அடையும். சட்டப் பேரவை எனும் மக்கள் மன்றத்தில் தொகுதி மக்களுக்குத் தேவையானவற்றை வாதாடி பெற வேண்டும். ஆனால் நோ்மாறாக திமுக உள்ளே, வெளியே வெளிநடப்பு செய்து செயல்பட்டுள்ளது. பொல்லாதவா்கள் கைக்கு ஆட்சி சென்று விடக்கூடாது.

இக்கூட்டத்தில் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பி.பரமசிவம், அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ், தமாகா நிா்வாகிகள் ஓ.கே.சண்முகம், என். வி.ராமசாமி, சிறுமுகை ரவிக்குமாா், மோகன் காா்த்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com