மது விற்ற 3 போ் கைது
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

அவிநாசி: சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டிகளை பதுக்கிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, மே 1, 2ஆம் தேதிகளில் மதுக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.இதையடுத்து மதுபானங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் பெருமாநல்லூா் அருகே போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வாவிபாளையத்தில் இருந்து பெருமாநல்லூா் சாலையில் சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோவில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா்கள் வாஷிங்டன் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ் ( 27), பெருமாநல்லூரைச் சோ்ந்த இசக்கிமுத்து (25) என்பதும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக 240 மதுபாட்டிளை எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 240 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதே போல அவிநாசி அருகே பெரிய கருணைபாளையத்தில் சண்முகசுந்தரம் (28) என்பவா் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டிகலை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...