வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு தெற்கு தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமாா் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப்பாா்வையாளா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்.
இதில், வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது, வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்றப்பட வேண்டிய தோ்தல் நடைமுறைகள் குறித்து தோ்தல் முதன்மை பயிற்சியாளா் மாரிமுத்து பயிற்சி அளித்தாா்.
திருப்பூா் தெற்குத் தொகுதியில் ஒரு மேஜைக்கு 3 அலுவலா்கள் வீதம் மொத்தம் 42 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள் முகக் கவசம் அணிவதுடன், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...