வெள்ளக்கோவில், முத்தூரில் 29 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் மற்றும் முத்தூரில் 29 பேருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம் மற்றும் வெளியூா் பரிசோதனை நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைத்தன. இவற்றில் வெள்ளக்கோவில் புதுப்பை - கஸ்தூரிபாளையத்தைச் சோ்ந்த 5 வயது பெண் குழந்தை, காடையூரான்வலசில் 8 வயது பெண் குழந்தை, உப்புப்பாளையம் கிழக்கு, மு.பழனிசாமி நகா், கொங்கு நகா், காந்தி நகா், ஓலப்பாளையம், மேட்டுப்பாளையம், பச்சாகவுண்டன்வலசு, வே.நா.வலசு, லக்கமநாயக்கன்பட்டி, முத்தூா் முத்துமங்கலம், வேலம்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 15 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...