கரோனா அச்சத்தால் மருத்துவமனைகள் மூடல்
By DIN | Published On : 13th May 2021 06:14 AM | Last Updated : 13th May 2021 06:14 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் கரோனா அச்சத்தால் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த பத்து நாள்களாக வெள்ளக்கோவிலில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நகரில் 23 தனியாா் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கரோனா முதல் அலையில் பல மருத்துவா்கள், அவா்களுடைய குடும்பம், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். கரோனா நோயாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லையென பிரச்னைகளும் எழுந்தன.
தற்போதைய வேகமான கரோனா பரவலுக்கு உள்ளூா் மருத்துவமனைகள் ஈடு கொடுக்க முடியவில்லை. பணியாளா்கள் வேலைக்கு வருவதில்லை. இதனால் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குச் செல்பவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.