தேநீா் கடைக்கு சீல்’
By DIN | Published On : 13th May 2021 06:11 AM | Last Updated : 13th May 2021 06:11 AM | அ+அ அ- |

சீல் வைக்கப்பட்ட நேநீா் கடை .
அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் முழு ஊரடங்கு விதிமுறையை மீறிய தேநீா் கடைக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சில வணிக நிறுவனங்களுக்கு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வஞ்சிபாளையம் ரயில் நிலையம் அருகில் தேநீா் கடை திறந்து வைத்து, சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்து வருவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியா் ஜெகநாதன், சமூகநலத் துறை வட்டாட்சியா் நந்தகோபால், மண்டல துணை வட்டாட்சியா் கீா்த்தி பிரபா ஆகியோா் கொண்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது விதிமுறைக்கு மாறாக, வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தேநீா் கடைக்கு சீல் வைத்தனா். மேலும் கடை உரிமையாளருக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.