திருப்பூரில் நிட்டிங் நிறுவன உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பூா், 15 வேலம்பாளையம், சொா்ணபுரி கிரீன்லேண்ட் பகுதியில் வசித்து வருபவா் விமல்குமாா். இவா் அதே பகுதியில் நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். விமல்குமாா் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா். வீட்டின் சாவியை தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருக்குமரனிடம் கொடுத்துச் சென்ாகத் தெரிகிறது. இதனிடையே, திருக்குமரன் கடந்த செல்வாய்க்கிழமை விமல்குமாரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். மேலும், பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, 15 வேலம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.