கரோனா: மாநகராட்சி உதவிப் பொறியாளா் பலி
By DIN | Published On : 13th May 2021 06:09 AM | Last Updated : 13th May 2021 06:09 AM | அ+அ அ- |

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் திருநாவுக்கரசு (54) , இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூரை அடுத்த வீரபாண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருநாவுக்கரசு உயிரிழந்தாா்.