முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பள்ளி மாணவா் நன்கொடை
By DIN | Published On : 16th May 2021 11:00 PM | Last Updated : 16th May 2021 11:00 PM | அ+அ அ- |

உண்டியல் சேமிப்புப் பணத்தை முதல்வரின் கரோனா நிவாரன நிதிக்கு வழங்கிய த.ஆ. இளஞ்சேரன்.
திருப்பூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ. 12,353 பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாா்.
திருப்பூா் தென்னம்பாளையத்தில் பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருபவா் ஆனந்தகுமாா். இவரது மனைவி தமிழரசி. இவா்களின் மகன் இளஞ்சேரன் (12) அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த மாணவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 12,353 பணத்தை வங்கியின் வாயிலாக முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கினாா்.