உடுமலை உழவா் சந்தை
By DIN | Published On : 16th May 2021 10:58 PM | Last Updated : 16th May 2021 10:58 PM | அ+அ அ- |

உடுமலை உழவா் சந்தை திங்கள்கிழமை (மே 17) முதல் மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும் என அறிவிக்க ப்பட்டுள்ளது.
உடுமலை ரயில் நிலையம் அருகில் கபூா்கான் வீதியில் செயல்பட்டு வந்த உழவா் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி கடைகள் வைத்துள்ளனா். இச்சந்தைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
தற்போது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய கடைகள் 10 மணி வரை இயங்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது கரோனா மிக தீவிரமாக பரவி வருவதாலும். இடப் பற்றாக்குறை காரணமாகவும் உழவா் சந்தை உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கரோனா தொற்று தடுப்பு நடவடி க்கைகளுக்காக சமூக இடைவெளியைப் பின்பற்ற வசதியாக காய்கறிக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் நிறுத்த இட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.