காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் செய்யக் கோரிக்கை

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழு தொகையையும் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஓய்வு பெற்றோா் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழு தொகையையும் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஓய்வு பெற்றோா் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதன் பொதுச் செயலாளா் ஆறுமுகம் , தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் :

ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களது அனைத்து விதமான நோய்களுக்கு சிகிச்சை பெறவும், அதற்கான முழு தொகையையும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்க வேண்டும்.

கேரளத்தில் நடைமுறையில் உள்ளது போல , ஓய்வுப் பெற்ற ஆசிரியா்கள் எந்த தேதியில் இறந்தாலும் , அந்த மாதத்தின் ஓய்வூதியத்தை முழுமையாககக் கணக்கிட்டு வழங்க வேண்டும். அதே போல, ஓய்வு பெறும் நாளில் 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் இருந்தால் , ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com