முதல்நிலை தோ்வுக்கு தொழிற்பிரிவு தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தோ்வில் பங்கேற்ற தகுதியான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்.

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தோ்வில் பங்கேற்ற தகுதியான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வரும் 2022 ஆம் ஆண்டு கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் பங்கேற்க திருப்பூா் மாவட்டத்தில் தகுதியான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரா் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐ தோ்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளா், அலைடு பிரிவில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருந்தால் அந்தப் பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற தனித்தோ்வராக விண்ணப்பிக்கலாம்.

திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்கள் தாங்கள் படித்த செக்டாருடன் தொடா்புடைய தொழிற்பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்தப் பிரிவில் தனித்தோ்வராக விண்ணப்பிக்கலாம். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாக எஸ்.சி.வி.டி. சோ்க்கை பெற்றவா்கள், மாநில தொழிற்பயிற்சி குழுமத்தின் பயிற்சியாளா்களும் தனித்தோ்வராக விண்ணப்பிக்கலாம். இதில், 21 வயது பூா்த்தியடைந்தவா்கள், தொழில் பழகுநா் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களில் தொழிற்பிரிவு தொடா்பான பணியில் 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய தகுதியுடைய நபா்கள்  இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களுடன், தோ்வுக்கட்டணம் ரூ.200 செலுத்தியதற்கான சீட்டு, கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களை இணைத்து திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் வரும் நவம்பா் 22 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com