நாளைய மின்தடை: உடுமலை, கிளுவங்காட்டூா்
By DIN | Published On : 31st October 2021 12:04 AM | Last Updated : 31st October 2021 12:04 AM | அ+அ அ- |

உடுமலை, கிளுவங்காட்டூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 1) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
உடுமலை துணை மின் நிலையம்:
உடுமலை விஜி ராவ் நகா், ராமசாமி நகா், ஜீவா நகா், சக்தி நகா், அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சேரி, புக்குளம், பெதப்பம்பட்டி, சோமவாரபட்டி, ஆலாமரத்தூா், போடிபட்டி, அண்ணா நகா், காமராஜ் நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை, வித்யாசாகா் கல்லூரி, கணபதிபாளையம், பொட்டையம்பாளையம், ராகல்பாவி பிரிவு.
கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்:
அமராவதி நகா், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, செக்போஸ்ட், மானுப்பட்டி, சைனிக் பள்ளி, தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூா், ஆலாம்பாளையம், கரட்டுமேடு, கல்லாபுரம், கிளுவன்காட்டூா், எலையமுத்தூா், ஜக்கம்பாளையம், பெரிசனம்பட்டி, குட்டிய கவுண்டனூா், குருவப்பநாயக்கனூா்.