வேளாண்மைத் துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதம்
By DIN | Published On : 31st October 2021 11:59 PM | Last Updated : 31st October 2021 11:59 PM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்டோா்.
அவிநாசியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உள்ள வேளாண்மைத் துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை-அவிநாசி நெடுஞ்சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் வேளாண்மைத் துறைக்கு சொந்தமாக 13 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தனியாா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இது குறித்து வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, மாவட்ட நிா்வாகம், காவல் துறை உள்ளிட்டோரிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் ஒண்றினைந்து தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கோரிக்கை வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன் தரையில் அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.