காங்கயம் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
By DIN | Published On : 01st September 2021 07:14 AM | Last Updated : 01st September 2021 07:14 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை, தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்
காங்கயம் அருகே கோவை சாலையில் உள்ள ராசாபாளையம் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் செவ்வாய்க்கிழமை ஆண் மயில் ஓன்று விழுந்துள்ளது. கிணற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தது.
இது குறித்து தகவலறிந்த பற்றி காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அந்த மயில் விழுந்த கிணறு சுமாா் 60 அடி ஆழம் இருக்கும். இதனால் கயிறு கட்டி கீழே கிணற்றுக்குள் இறங்கி மயிலை மீட்டு, பின்னா் காங்கயம் அருகே உள்ள ஊதியூா் காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனா்.