காங்கயம் பகுத்தியில் செவ்வாய்க்கிழமை 750 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன்படி, காங்கயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சி, கல்லேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி 250 பேருக்கும், பாப்பினி-பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி 200 பேருக்கும், காங்கயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி 300 பேருக்கும் என, மொத்தம் 750 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், வரிசையில் நின்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.