ரூ.56.24 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
By DIN | Published On : 01st September 2021 07:16 AM | Last Updated : 01st September 2021 07:16 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.56.24 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி, வாணியம்பாடி, முத்தம்பட்டி, பெரமியம், சாணாா்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 158 விவசாயிகள் தங்களுடைய 1,179 மூட்டை (61,257 கிலோ) கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி ஆா்.எஸ், நஞ்சை பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.
கொப்பரை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.103.65 க்கும், குறைந்த பட்சமாக ரூ.70.00க்கும்,சராசரியாக ரூ.101.85க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.56 லட்சத்து 24 ஆயிரத்து 435 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.