தொழிலாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th September 2021 02:14 AM | Last Updated : 04th September 2021 02:14 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, திருப்பூா் மாநகரில் உள்ள தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், திருப்பூா் மாநகராட்சியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.