வளா்ச்சித் திட்டப் பணிகள்: திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு
By DIN | Published On : 19th September 2021 05:31 AM | Last Updated : 19th September 2021 05:31 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.செல்வராஜ்(திமுக), கே.என்.விஜயகுமாா் (அதிமுக) உள்ளிட்டோா்.
பெருமாநல்லூா் அருகே காளிபாளையத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை திமுக, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் குருவாயூரப்பன் நகரில் ரூ.14.20 லட்சம் மதிப்பில் சாலை வசதி, ரூ.17.80 லட்சம் மதிப்பில் உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைத்தல் என மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
இப்பணிகளை திமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.செல்வராஜ் (திருப்பூா் தெற்கு), அதிமுக கே.என்.விஜயகுமாா் (திருப்பூா் வடக்கு) ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதில், ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் வேல்குமாா் சாமிநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் சுகன்யா வடிவேல், பொறுப்பாளா்கள் தினேஷ் குமாா், தங்கராஜ், விசுவநாதன், நந்தகுமாா், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.