இடுவாய் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

திருப்பூா் அருகே உள்ள இடுவாய் ஊராட்சியில் 15 ஆவது நிதிக் குழு மானிய நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் அருகே உள்ள இடுவாய் ஊராட்சியில் 15 ஆவது நிதிக் குழு மானிய நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் கே.கணேசன் தலைமை வகித்தாா்.

இதில், சீராணம்பாளையம் செந்தில் நகா், பாரதிபுரம், காமாட்சி நகா், கே.என்.எஸ். நகா்ப் பகுதிகளில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா்க் குழாய்கள் பதித்தல், இடுவாய் வடக்கு காலனி, மணியம் நகா் பகுதிகளில் ரூ.4.83 லட்சத்தில் கழிவு நீா் கால்வாய் அமைத்தல், வள்ளுவா் நகா் முதல் வீதி, ரைஸ் மில் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில்

ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீா் கால்வாய் அமைத்தல் உள்பட மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில்

வளா்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பிரபு, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ஆா்.ஈஸ்வரி, எம்.கணேசன், எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com