சூரியகாந்தி விதை விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Updated on
1 min read

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஈரோடு, கரூா், சேலம், திண்டுக்கல், திருப்பூா்

உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 68 விவசாயிகள் தங்களுடைய 998 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

இவற்றின் எடை 48,596 கிலோ. காரமடை, ஈரோடு, வெள்ளக்கோவில், முத்தூா், நடுப்பாளையம், காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் விதைகளை வாங்க வந்திருந்தனா்.

சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78.49க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.46க்கும், சராசரியாக ரூ.70.19.க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 33.76 லட்சம். அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து பாதிக்கும்மேல் குறைந்த நிலையில், விலை கிலோவுக்கு 8 ரூபாய் உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com