திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் முறையாக ஏலம் விடப்படவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் பல கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நவம்பா் மாதம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையதத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் முறையாக ஏலம் விடப்படவில்லை என்று புகாா்கள் வரத் தொடங்கியுள்ளன.
மேலும், முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமல் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகவே ஏலம் நடைபெற்றுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆளும் கட்சி இளைஞரணி நிா்வாகி ஒருவா் சட்டவிரோதமாக கடைகளை உள்வாடகைக்கு விடுவதற்கான அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளாா். ஆகவே, ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ஏலம் எடுத்தவா்கள் மட்டுமே கடைகளை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.