முத்தூரில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 5,689 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 2,506 கிலோ. விலை கிலோ ரூ.18.25 முதல் ரூ.27.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.26.80.

13 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 286 கிலோ. விலை கிலோ ரூ.60.90 முதல் ரூ.83.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.81.15.

ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com