

அவிநாசி: கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பான விபர பட்டியல் குறித்து பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பாக, பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அந்த பேனரில், முக்கிய அறிவிப்பு எனக் குறிப்பிட்டு, மணிகாரர் அம்மாவிடம் சென்று யாரும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம் (விலை பட்டியல் எனக் குறிப்பிட்டு பட்டா சிட்டா, இறப்புச் சான்றிதழ், அடங்கல், வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்கு(ரூ. 72,000 எனக் குறிப்பிட்டு), திருமண பதிவு சான்றிதழ், இடம் அளந்து கொடுக்க, இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ், கணவரால் கைவிடபட்டவர் (சான்றிதழ்), பிறப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என பட்டியல் அடக்கிய பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.