

தாராபுரம் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சாலக்கடை சாலையின் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து கோவை வேளாண் கல்வித்துறைக்கு காரில் இன்று சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் அருகே உள்ள சாலக்கடை என்ற பகுதியில் தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
இதில் நாகராஜ்(23), பிரேமலதா(43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம்(61) தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு உயர் சிகிச்சைக்காக தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேலும் சுமித்ரா(19) மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து மூலனூர் ஆய்வாளர் செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.