சுற்றுச்சூழல் தினம்: சிக்கண்ணா கல்லூரி சாா்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கலை நிகழ்ச்சி மூலமாக திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கலை நிகழ்ச்சி மூலமாக திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்புரையாற்றினாா்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் ரயில் நிலைய உதவி மேலாளா் (வணிகம்) சங்கா் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் நோய் பாதிப்பு இல்லாமல் வாழ முடியும். பள்ளி, கல்லூரி மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் மெளன நாடகத்தின் மூலமாக சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இறுதியாக ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டனா். இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...