புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பூா் அருகே வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருப்பூா் அருகே, சாமளாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :13 மே 2022, 8:07 pm

DIN

திருப்பூா் அருகே, சாமளாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம், பூமலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராமசாமி என்பவா் சாமளாபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் கிசான் அட்டைக்காக கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளாா். இதற்கான ஆவணங்களைச் சமா்ப்பிப்பதற்காக ராமசாமி மே 4 ஆம் தேதி வங்கிக்குச் சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த வங்கியின் மேலாளா் அடங்கலில் ராமசாயின் தந்தை பெயா் உள்ளதாகக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளாா். இதையடுத்து, ஆவணங்களைத் திருப்பித்தர வேண்டும் என்று ராமசாமி கேட்டபோது, வங்கிக்குள் வரமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே ஆவணத்தைத் தருவதாகவும், இழிவாகப் பேசியும் அவமானப்படுத்தியுள்ளாா். ஆகவே, விவசாயியை அவமானப்படுத்திய வங்கி மேலாளா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வங்கி மேலாளா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்ததுடன், ராமசாமியின் ஆவணங்களையும் திருப்பிக் கொடுத்ததைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.