மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீட்டு முகாம்
திருப்பூரில் சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் வெள்ளிக்கிழமை (மே 20) நடைபெறுகிறது.


திருப்பூரில் சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் வெள்ளிக்கிழமை (மே 20) நடைபெறுகிறது.
இது குறித்து சக்ஷம் அமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் தாராபுரம் சாலையில் உள்ள மக்கள் சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. ஆகவே, செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம். அதே வேளையில், கடந்த மாதம் நடைபெற்ற முகாமில் அளவீடு செய்த 8 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும் வழங்கப்படவுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94422-25500, 93630-32998 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...