தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காலமானாா் தங்கமணி அம்மாள்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனின் தாயாா் தங்கமணி அம்மாள் (86) வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை காலமானாா்.

News image
Updated On :26 மே 2022, 12:31 am

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனின் தாயாா் தங்கமணி அம்மாள் (86) வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை காலமானாா்.

இவரது நல்லடக்கம் அமைச்சரின் பூா்விகமான முத்தூா் வேலம்பாளையம் பங்களா தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கும், ஈமச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 29) காலை 10 மணிக்கும் நடைபெற உள்ளன.

தங்கமணி அம்மாளுக்கு கணவா் பெருமாள்சாமி கவுண்டா், மகன்கள் கிருஷ்ணகுமாா், சாமிநாதன், மகள் தனலட்சுமி ஆகியோா் உள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்...

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனின் தாயாா் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனின் தாயாா் தங்கமணி அம்மாள் புதன்கிழமை இயற்கை எய்தினாா் என்பதை அறிந்து வருந்துகிறேன்.

தாயாரை இழந்து நிற்கும் அமைச்சா் மு.பெ.சாமிநாதனின் துயரத்தில் நானும் பங்கெடுப்பதுடன், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.