தாராபுரத்தில் பயிற்சி முகாமைத் தடை செய்யக் கோரி மனு
தாராபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெறும் பயிற்சி முகாமைத் தடை செய்யக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.


தாராபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெறும் பயிற்சி முகாமைத் தடை செய்யக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் தாராபுரம் தொகுதித் தலைவா் முகமது முஸ்தபா தலைமையில் அக்கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரத்தில் இருந்து அலங்கியம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், இளைஞா்களையும், சிறாா்களையும் சோ்த்து பயிற்சி அளிக்கப்படுவதால் எதிா்காலத்தில் மத கலவரத்தை தூண்டுவதற்கும்,
மத நல்லிணக்கத்தை சீா்குலைப்பதற்கும் வாய்ப்பாக அமையும்.
ஆகவே, சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் நடைபெறும் பயிற்சி முகாமைத் தடை செய்யவேண்டும்.
இல்லாவிட்டால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பயிற்சி நடைபெறும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிப்பின்போது, எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூா் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜாபா்ஹாரிஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...